கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு; சென்னை விமானக் கட்டணங்கள் மும்மடங்கு உயர்வு..!
Chennai Airfares Triple Due to School Reopenings
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 04-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. பள்ளி திறப்பை ஒட்டி வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்புவதால் சென்னைக்கு வரும் விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
விடுமுறை காரணமாக சொந்த ஊர் மற்றும் வெளியூர் சென்றவர்கள் ஒட்டுமொத்தமாக சென்னை திரும்புகின்றனர். இதனால் மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, திருவனந்தபுரம், கொச்சியில் இருந்து சென்னைக்கு வரும் விமான கட்டணங்கள் 03 மடங்காக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, மதுரையில் இருந்து சென்னைக்கு சாதாரண நாளில் ரூ.5,800 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.17,303-ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சாதாரண நாளில் ரூ.6,600-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.17,272-ஆக உயர்ந்துள்ளது.
அதேப்போன்று, திருச்சியில் இருந்து சென்னைக்கு சாதாரண நாளில் ரூ.4500 -ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.14,404-ஆக உயர்ந்துள்ளது. மற்றும் கோவை - சென்னைக்கு சாதாரண நாளில் ரூ.4,744-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.16,504-ஆக உயர்ந்துள்ளது. அடுத்ததாக திருவனந்தபுரம் - சென்னைக்கு சாதாரண நாளில் ரூ.5,700-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.13,516-ஆக உயர்ந்தது.
English Summary
Chennai Airfares Triple Due to School Reopenings