தம்பியை நரபலியாக கொன்ற அண்ணன்! செங்கல்பட்டில் அதிர்ச்சி கொலை!
chengalpattu youngster murder
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த அம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மனின் மகன் சுபாஷ் (27), அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது பெரியப்பா அண்ணாமலையின் மகன் சுரேந்தர் (32) ஆகியோர் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களாக இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் சுபாஷ் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சுரேந்தர் அவரை எழுப்பி, “அவசர வேலைக்கு வெளியே போக வேண்டும், உன்னோட பைக்கில் அழைத்துச் செல்லவும்” என கேட்டுள்ளார்.
பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, வழியில் சுரேந்தர் திடீரென பின்பகுதியில் இருந்த நிலையிலேயே, முன்னதாக தயார் வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாஷின் கழுத்தில் வெட்டியுள்ளார். சுபாஷ் இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த சுரேந்தர் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுபாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சுரேந்தரை கைது செய்த போலீசார், "அவருக்கு அடிக்கடி சாமி ஆடுவது வழக்கம். அப்போது நரபலி தேவை எனத் தோன்றியிருக்கலாம். இதன் அடிப்படையில் உறவினரான சுபாஷை கூட்டிச் சென்று கொலை செய்திருக்கலாம்" என தெரிவித்தனர். சம்பவம் சம்பந்தமாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
chengalpattu youngster murder