#Breaking: சென்னைவாசிகளே உஷார்.. செம்பரம்பாக்கம் நீர் வெளியேற்றம் மீண்டும் அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிய நிலையில், உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் சென்னை அடையாறில், தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநீர்மலை, குன்றத்தூர், முடிச்சூர், அடையாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு முன்னதாக 3000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தற்போது 4000 கன அடி நீர் ஏரிக்கு தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதால், நீரின் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், மாலை 6 மணிமுதல் 5 ஆயிரம் கன அடி நீராக அதிகரிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chembarambakkam Lake Water Discharge Increase 25 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->