கோவை கார் வெடிப்பு வழக்கில் தீடிர் திருப்பம்! 4 பேர் என்.ஐ.ஏ குற்றப்பத்திக்கை தாக்கல்! - Seithipunal
Seithipunal


கோவை கார் வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நான்கு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கரமேஸ்வரர் கோயில் முன் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில் மின் கார் வெடிப்பு ஏற்பட்டதால் கோட்டைமேடு ஜமேசா முபின் உடல் சிதறி சம்பவ இடத்திலே பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 2023 ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ஜமீல் பாஷா, முகமது உசேன், இஸ்ரத் மற்றும் சையது அப்துல் ரகுமான் உட்பட 18க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மீதும் உபாசட்டத்திற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜமீல் பாஷா அரபிக் கல்லூரி அமைத்து பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை சேர்த்து தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவின் தடை செய்யப்பட்ட ஐஎஸ் மற்றும் பல்வேறு தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் குறித்து கார் வெடிப்பில் உடனடியாக செயல்பட்டவர்களிடமும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ  நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளான  ஜமீல் பாஷா, முகமது உசேன், இஸ்ரத் மற்றும் அப்துர் ரகுமான் ஆகியர் மீது நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Charge sheet against four main culprits in Coimbatore car blast case


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->