சந்திர கிரகணம் எதிரொலி: தஞ்சை பெரிய கோயில் மூடல்!
Chandra kirakanam thanjai temple close
சந்திர கிரகணம் என்பது, சூரியன் மற்றும் சந்திரன் இடையே பூமி வந்தபோது, அதன் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் படிந்து சந்திரன் மறையும் இயற்கை நிகழ்வாகும்.
இன்று இரவு இந்தியாவில் அரிதான இந்த சந்திர கிரகணத்தை காணலாம். இரவு 8.58 மணியளவில் கிரகணம் தொடங்குகிறது. இதை வெறும் கண்களாலும், டெலஸ்கோப் அல்லது பைனாகுலர் மூலமாகவும் தெளிவாகப் பார்க்க முடியும்.
வானியல் நிபுணர்கள் கூறுகையில், பகுதி கிரகணம் இரவு 9.57 மணிக்கு ஆரம்பிக்கும். அதன் பிறகு, முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 12.23 மணிவரை தொடரும். இதனால், மொத்தம் 1 மணி 22 நிமிடங்கள் நிலா முழுமையாக மறைந்திருக்கும்.
பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு நிறைவடைகிறது. முழு சந்திர கிரகணம் முழுமையாக முடியும் நேரம் அதிகாலை 2.25 மணி. இந்நேரத்தில், நிலா இரத்த சிவப்பு நிறத்தில் மாறி காட்சியளிக்கும்.
2022-ம் ஆண்டுக்குப் பிறகு நீண்ட நேரம் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் என்பதால், வானியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.
இதேநேரத்தில், கிரகணத்தை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தஞ்சாவூர் பெரிய கோவிலில் மதியம் 4 மணிக்கே நடை சாத்தப்பட்டு, கிரகணம் முடிந்த பின் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chandra kirakanam thanjai temple close