உலக பூமி தினம்  கொண்டாட்டம்... புவி வெப்பமயமாதலை தடுக்க  மரக்கன்றுகளை வழங்கிய  கல்லூரி மாணவிகள்!   - Seithipunal
Seithipunal


உலக பூமி தினத்தை முன்னிட்டு புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில், ஒவ்வொருவரும் அரசு அலுவலகங்களில் மரங்களை வளர்க்க வேண்டும் என்று வேளாண் கல்லூரி மாணவிகள் மரக்கன்றுகளை வழங்கினர்.

சுற்றுச்சூழல் மாறுபாட்டால் பூமி அழிந்துக் கொண்டு வருகிறது. அனைத்து உயிர்களும் வாழ உகந்த கிரகமான பூமியில் மக்கள்தொகை பெருக்கம்,மற்றும்  இயற்கை வளங்கள் குறைந்து வருவதால்  இயற்கை அன்னையை பேணிகாத்து அதன் மூலம் பூமியை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் உலக பூமி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    அந்தவகையில் தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும்  கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள், கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ், கிராமங்களில் தங்கியிருந்து விவசாயிகளுடன் கலந்துரையாடி ,பல்வேறு விஷயங்களை அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டும் ,நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தியும், தங்கள் அனுபவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் உலக பூமி தினத்தை கொண்டாடும் வகையில், அதற்கான உலக உருண்டை வரைபடங்களுடன், மாணவிகள் தீபிகா, திவ்யா, ஜெனி ரோஸ் ,காவியா, நிரஞ்சனா, ரித்திகா, ரோஸ்மிதா, சகுந்தலா ,சினேகா ஆகிய மாணவிகள் பள்ளிகள், ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலையம், ஆண்டிபட்டி காவல் நிலையம் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு சென்று, உலக மாதிரி படங்களை வழங்கி, பூமி தினத்தை கொண்டாடினர் . 

அப்போது புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில், ஒவ்வொருவரும் அரசு அலுவலகங்களில் மரங்களை வளர்க்க வேண்டும் என்று எடுத்துரைத்தனர். மேலும் மரக்கன்றுகளையும் வழங்கினர். இதனை பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Celebrating World Earth Day College students donate saplings to fight global warming


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->