பள்ளிகளுக்கு சிசிடிவி கேமரா - பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியின் 2024 – 2025ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் வெளியாகும் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பள்ளிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது:- 

* 255 பள்ளிகளுக்கு 7.64 கோடி ரூபாயில் தலா ஒரு பள்ளிக்கு 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்

* 419 பள்ளிகளில் பயிலும் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தலா இரண்டு எண்ணிக்கை விதம் பள்ளி சீருடைகள், ஒரு ஜோடி ஷூ மற்றும் இரண்டு ஜோடி சாக்ஸ் வழங்கப்படும்.

* 24700 மாணவர்களுக்கு பள்ளி சுற்றுலா அழைத்து செல்ல ரூபாய் 4.72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* மூன்று கோடி செலவில் மாநகராட்சியின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று பல புதிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cctv camera fit in chennai corporation schools


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->