'விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய பரிசீலனை'; அமைச்சர் மரிய வில்சன்..! - Seithipunal
Seithipunal


தவெக ஆட்சியில் ஆர்பிஐ அறிவுறுத்தலின்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு ரூ.2,500 வாக்குறுதி குறித்து திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தெரிய வரும் என தமிழக என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது கூறுகையில் தெரிவித்துள்ளதாவது;

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்யப்படுகிறதாகவும், விவசாயக் கடன் தள்ளுபடியை பொறுத்தவரை, 2021-ஆம் ஆண்டின் இறுதியில் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. பின்னர் திமுக ஆட்சியில், ஐந்தாண்டுகளில் அதை படிப்படியாக தவணை முறையில் நிறைவேற்றியது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது தவெக ஆட்சியில் ஆர்பிஐ அறிவுறுத்தலின்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தவெக அளித்த பெண்களுக்கு ரூ.2,500 வாக்குறுதியை நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறதா என்ற செய்தியாளர் கேள்வி எழுப்பினர் 

அதற்கு திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இது குறித்து தெரிய வரும் என்று பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Maria Wilson Considers Complete Waiver of Agricultural Loans


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->