ரூ.124 கோடி செலவில் ‘சி.சி.டி.என்.எஸ் 2.0’ ...! காவல் சேவைகள் இனி முழுக்க டிஜிட்டல்! - நாளை தொடங்கி வைக்கும் மு.க. ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


தமிழக காவல்துறையின் செயல்திறனை மேலும் நவீனப்படுத்தும் நோக்கில் ‘சி.சி.டி.என்.எஸ். 2.0’ எனும் அதிநவீன மென்பொருள் ரூ.124.37 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய டிஜிட்டல் அமைப்பு விரைவில் காவல்துறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சமுதாய சேவைப் பதிவேடு (CSR), முதல் தகவல் அறிக்கை (FIR), ஆரம்ப நிலை விசாரணை உள்ளிட்ட அனைத்து முக்கிய பதிவுகளையும் எளிதாக பதிவு செய்ய முடியும்.

மேலும், எப்.ஐ.ஆர்., குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணை அறிக்கைகள் உடனுக்குடன் ஆன்லைன் மூலம் நேரடியாக நீதிமன்றங்களுக்கு அனுப்பும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.பொதுமக்களும் இதன் மூலம் ஆன்லைனில் புகார் அளித்து, அதன் நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட புகார்கள், CSR, FIR விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்களின் முன்னேற்றம் ஆகியவற்றை நேரடியாக கண்காணிக்க முடியும். கைது செய்யப்பட்டவர்களின் தகவல்களையும் அறியும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சாலை விபத்து தொடர்பான ஆவணங்களை பதிவிறக்கம் செய்தல் போன்ற சேவைகளும் பொதுமக்களுக்கு கிடைக்கும். இதனுடன், டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு முறைமையும் காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நவீன திட்டங்களும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டங்களை மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக நாளை தொடங்கி வைக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CCDNS 2point0 cost 124 crores Police services completely digital MK Stalin inaugurate tomorrow


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->