காரைக்குடி : சத்தியன் தியேட்டரில் முட்டை பப்ஸை ருசி பார்த்த பூனை - வைரலாகும் வீடியோ.!
cat ate egg pops in karaikudi theater
காரைக்குடி : தியேட்டரில் முட்டை பப்ஸை ருசி பார்த்த பூனை - வைரலாகும் வீடியோ.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி காந்திடல் மேற்கு பகுதியில் சத்தியன் திரையரங்கம் உள்ளது. இந்தத் திரையரங்கில் நவீன தொழில் நுட்ப வசதியுடன் முன்னணி கதாநாயகன்கள் நடித்த புதிய படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.
இந்த தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்களுக்கு இடைவேளையில் உணவுப் பொருள்கள் உள் அரங்கிலே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரையரங்கில் உணவு பொருள் விற்பனை பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த முட்டை பப்ஸ்சை பூனை ஒன்று சாப்பிட்டு ருசி பார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைதங்களில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்து திரையரங்கில் படம் பார்க்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திரையரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருள்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை திரையரங்கத்தில் உணவு பொருள் விற்பனை செய்வதற்கு தடை விதித்தனர்.
English Summary
cat ate egg pops in karaikudi theater