தேனி || முன்னாள் ராணுவ வீரர்களால் அல்லோலப்பட்ட கும்பகரை அருவி.. மதுபோதையில் ரகளை..! - Seithipunal
Seithipunal


பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், தேனியை பாலமுருகன், அருப்புக்கோட்டையை சேர்ந்தவ கந்தசாமி உள்ளிட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் அவர்களது நண்பர்களுடன் அருவிக்கு குளிக்க சென்றனர்.அப்போது அங்கு வந்த பெண்களிடன் அவர்கள் தகாத முறையில் நடந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண்கள் வனத்துறையிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை மடக்கி பிடித்தபோது போதை ஆசாமி ஒருவர் கத்தியை கொண்டு வனத்துறையினரை தாக்க முயன்றார். அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அவர்களை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஆனால், அவர்கள் இடத்தை விட்டு நகராமல் சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு ரகளையில் ஈடுப்பட்டவர்களை 108 வாகனத்தில் அழைத்துவந்ததுடன் காயமடைந்த நபரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முன்னாள் ராணுவ வீரர்களின் இந்த செயலால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளானர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case flied against Ex army mans


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->