வாயில் உருகும் கரமேல் மாயம்...! பிலிப்பைன்ஸ் பெருமை லெச்சே ஃபிளான்...!
Leche Flan philiphines food recipe
லெச்சே ஃபிளான் (Leche Flan) – பிலிப்பைன்ஸின் இனிமையான கரமேல் டெசர்ட்
விளக்கம் :
லெச்சே ஃபிளான் என்பது பிலிப்பைன்ஸில் மிகவும் பிரபலமான டெசர்ட் ஆகும். இது நம் கஸ்டார்ட் புட்டிங்கை போன்றே இருக்கும். முட்டை, பால், சீனி ஆகியவற்றின் கலவையில் கரமேல் சாஸ் சேர்த்து நீராவியில் வேகவைக்கும் இனிப்பு உணவு. இதன் மிருதுவான தன்மை, வாயில் உருகும் சுவை மற்றும் கரமேலின் இனிமை காரணமாக பண்டிகை, திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் பரிமாறப்படுகிறது.
தேவையான பொருட்கள் :
முட்டை மஞ்சள் – 10
கன்டென்ஸ்டு மில்க் – 1 டின்
ஈவாபரேட்டட் மில்க் – 1 டின்
சர்க்கரை – 1 கப் (கரமேலுக்கு)
வெண்ணிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை :
முதலில் கரமேல் செய்வது :
ஒரு கடாயில் சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து கரிய வண்ணமாக உருக்கவும்.
கரைந்த கரமேலை ஒரு புட்டிங் மோல்டின் அடியில் ஊற்றி ஆறவிடவும்.
கஸ்டார்ட் கலவை தயாரித்தல் :
ஒரு பாத்திரத்தில் முட்டை மஞ்சள், கன்டென்ஸ்டு மில்க், ஈவாபரேட்டட் மில்க், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக குலுக்கவும்.
இந்த கலவையை வடிகட்டி கரமேல் ஊற்றிய மோல்டில் ஊற்றவும்.
வேகவைக்கும் முறை :
மோல்டை மூடி, இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் நீராவியில் 30–40 நிமிடங்கள் வேகவைக்கவும்.
வெந்ததும் குளிர வைத்து, மோல்டை மெதுவாக கவிழ்த்தால் லெச்சே ஃபிளான் அழகாக வெளியே வரும்.
English Summary
Leche Flan philiphines food recipe