#BigBreaking:: வதந்தி பரப்பியதாக அண்ணாமலை மீது வழக்கு பதிவு..!! - Seithipunal
Seithipunal


சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பொய் பிரச்சாரங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்பொழுது வரை வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்து 4 வழக்குகளை பதிவு செய்த தமிழக காவல்துறையினர் தனி படை அமைத்து பல்வேறு மாநிலங்களுக்கு குற்றவாளிகளை கைது செய்ய விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்று வெளியிட்டார். அந்த அறிக்கையில் வட மாநில தொழிலாளர்கள் பற்றி திமுக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் எதிரொலியாக இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக தமிழர்களை தூண்டிவிடும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிரச்சாரம் செய்ததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்.

அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வதந்தி பரப்புதல், இரு பிறவினருக்கிடையே மோதலை ஏற்படுத்துதல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதேபோன்று பீகார் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தில் வட மாநிலத் தவறுகள் தாக்குவது போன்ற பொய் செய்திகளை பரப்பியதற்காக பீகார் மாநில பாஜக ட்விட்டர் பக்கத்தின் மீது அதே நான்கு பிரிவினக்கில் வழக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பீகார் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை முடக்கவும் அதில் பதிவிட்டுள்ள பொய் செய்திகளை நீக்கவும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக இந்தியா முழுவதும் சர்ச்சை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case filed against Annamalai for spreading rumours


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->