செங்கோட்டையன் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி...! - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
Case against Sengottaiyan Vetri dismissed Madras High Court takes action
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறங்கிய செங்கோட்டையன் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.பிரபு தாக்கல் செய்த மனுவில், செங்கோட்டையனின் வேட்பு மனுவில் சான்றளித்த நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற சூழலில் அந்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், எனவே செங்கோட்டையனின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, செங்கோட்டையன் தரப்பில் தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும், பிரபு தரப்பில் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனவும் இருதரப்பிலும் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செங்கோட்டையன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், தேர்தல் வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதி இன்று வழங்கினார். அதில், அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.
செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், கோபிசெட்டிபாளையம் தொகுதி தேர்தல் தொடர்பான இந்த சட்டப்போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
English Summary
Case against Sengottaiyan Vetri dismissed Madras High Court takes action