நெல்லையில் கஞ்சா நெட்வொர்க் காலி...! சொகுசு கார், பைக்கோடு சிக்கிய 3 பேர்...! - 3.4 கிலோ கஞ்சா பறிமுதல்...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாநகரில் காவலர்கள் மேற்கொண்ட தீவிர வாகன தணிக்கையின்போது, காரில் கடத்தப்பட்ட 3 கிலோ 450 கிராம் கஞ்சா சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மூன்று பேரை கைது செய்த காவலர்கள், கஞ்சாவுடன் கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பெருமாள்புரம் பகுதியில், சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் காவலர்கள் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரின் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதை நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில், பெருமாள்புரம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி தினேஷ் (28), தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி மணி என்ற எஸ்டேட் மணி (44), வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்ற தமிழ் சிங்கம் (25) ஆகியோர் 3 கிலோ 450 கிராம் எடையுள்ள கஞ்சாவை சட்டவிரோதமாக வைத்திருந்தது அம்பலமானது.

இதையடுத்து, அவர்களிடமிருந்து 3 கிலோ 450 கிராம் கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நடவடிக்கை, திருநெல்வேலி மாநகரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை ஒழிக்கும் நோக்கில் காவல்துறை மேற்கொண்டு வரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cannabis network busted Nellai 3 people caught luxury car bike 3point4 kg cannabis seized


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->