இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் இன்று மாலை ஐந்து மணிக்கு தொடங்க உள்ளது. இதில் அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். 

இந்த அமைச்சரவை கூட்டம் தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் கூடுகிறது. இந்த பொது பட்ஜெட்டில் சில முக்கிய திட்டங்கள் இடம் பெறுகின்றன. 

அதிலும் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டமும் இடம் பெறவுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பொது பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள் மற்றும் அவற்றிற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த ஆலோசனை நடைபெற உள்ளது. 

அதுமட்டுமல்லாமல், இந்த பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி உள்ளிட்ட அம்சங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cabinate meeting in chennai head office by CM mk stalin


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->