இலவச பேருந்து பயணம் - மாற்றுத் திறனாளிகளுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.!!
bus traval free to disabled persons in chennai
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக, 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரண நகர பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து பயண அட்டை செல்லுபடியாவதற்கான காலம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
இதனால், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகைச் சீட்டு வழங்கும் திட்டம் அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளம் அல்லது இ-சேவை மையம் (www.tnesevai.tn.gov.in) வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை அட்டையை பதிவிறக்கம் செய்யும் திட்டத்தினை செயல்படுத்திட கால அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே, பயனாளிகள் பயன்படுத்தி வரும் இலவச பேருந்து பயண சலுகை அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கும் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை 31.03.2025 வரை உள்ள பழைய அட்டை வைத்திருப்பவர்கள் 30.06.2025 வரை மூன்று மாத காலத்திற்கு பயணம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், காஞ்சிபுரம் முகவரியையும் மற்றும் 044-29998040 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
bus traval free to disabled persons in chennai