பேருந்து பயணிகளே உஷார்...! திருச்சியில் ஓடும் பேருந்தில் முதியவரை குறிவைத்து 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு...!
Bus passengers beware elderly man targeted and 4 pound gold chain snatched from him bus Trichy
பெரம்பலூர் அரசறை அறிஞர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (65), சம்பவம் நடைபெற்ற நாளில் நண்பகல் வேளையில் தனியார் நகரப் பேருந்தில் சீனிவாசநகரில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டார்.

பேருந்து நிலையத்தில் இறங்கி தனது உடைமைகளை சோதித்தபோது, பையில் பாதுகாப்பாக வைத்திருந்த தலா நான்கு பவுன் எடையுடைய இரண்டு தங்கச் சங்கிலிகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பேருந்தில் நிலவிய கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்திய மர்மநபர்கள், யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் நகைகளை நுட்பமாக அபகரித்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கோட்டை குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, நகைகளை அபகரித்த மர்மநபர்களை கண்டறியும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Bus passengers beware elderly man targeted and 4 pound gold chain snatched from him bus Trichy