நிகர லாபம் 10.09% உயர்வு...! இந்தியன் வங்கியின் முதல் காலாண்டில் ரூ.3,273 கோடி லாபம் ஈட்டி புதிய மைல்கல் சாதனை...! - Seithipunal
Seithipunal


இந்தியன் வங்கியின் 2026–27-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு நிதிச் செயல்பாட்டு விவரங்களை, வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பினோத் குமார் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

அப்போது, வங்கியின் வருவாய், லாபம் மற்றும் வணிக வளர்ச்சி பல்வேறு அளவுகளில் கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,973 கோடியாக இருந்த வங்கியின் நிகர லாபம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.3,273 கோடியாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 10.09 விழுக்காடு வளர்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் நிகர லாபம், வங்கியின் உறுதியான செயல்திறனையும் சீரான வளர்ச்சிப் பாதையையும் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.அதேபோல், செயல்பாட்டு லாபம் ரூ.4,770 கோடியில் இருந்து ரூ.5,557 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், நிகர வட்டி வருவாய் ரூ.6,359 கோடியில் இருந்து ரூ.7,435 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் ஒட்டுமொத்த வணிக நடவடிக்கைகளும் விரிவடைந்து, மொத்த வணிக மதிப்பு கடந்த ஆண்டைவிட 13.66 விழுக்காடு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

வைப்புத் தொகையிலும் வங்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 289 கோடியாக இருந்த மொத்த வைப்புத் தொகை, தற்போது ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 578 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், முன்னுரிமைத் துறைகளுக்காக ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 720 கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி, ஐ.ஐ.பி.எப். அமைப்பு இந்தியன் வங்கிக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளதாக பினோத் குமார் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Bank net profit rises 10point09 percenage new milestone profit 3273 crore first quarter


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->