டெல்லியில் முன்னாள் படை வீரர் வீட்டில் கொள்ளை, ஒருவர் கைது!
Burglary at the house of a former soldier in Delhi one arrested
டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில், துப்பாக்கி முனையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் வெளிநாட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. முகமூடி அணிந்த 3 பேர், குடும்பத்தினரை மிரட்டி கைகளை கட்டிவைத்து, சமையலறையில் பூட்டி விட்டு தப்பியோடியுள்ளனர்.
டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் வசித்து வருபவர் பீம்சென்,தேசிய பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பீம்சென்,கினாரி மார்க்கெட் பகுதியில் நகை தொழில் செய்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று மகன், மருமகளுடன் வீட்டில் இருந்தபோது, துப்பாக்கி ஏந்திய மர்ம ஆசாமிகள் சிலர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்தவர்களை துப்பாக்கியை காட்டி, கைகளை கட்டிப்போட்டு, வாயில் டேப் போட்டு ஒட்டி விட்டனர்.பின்னர் வீட்டில் இருந்த நகை, விலை மதிப்பில்லா கற்கள் என ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து கொண்டனர். 3,550 டாலர் மதிப்பிலான பணமும் கொள்ளையடித்து கடைசியாக, குடும்பத்தினரை சமையலறையின் உள்ளே தள்ளி, பூட்டி விட்டு வெளியேறினர்.இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்தனர்.பின்னர் விசாரணையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டது தெரிய வந்துள்ளது.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், நொய்டாவில் அலோக் குமார் மிஷ்ரா (35) என்பவரை கைது செய்தனர். அவர் அரசு ஊழியரின் டிரைவராக வேலை செய்தவர் என தெரியவந்துள்ளது. தப்பியோடிய மற்றவர்களை பிடிக்க தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.
English Summary
Burglary at the house of a former soldier in Delhi one arrested