பெண்கள் உடையணிந்து மகளிர் விடுதியில் இரவில் சுற்றித்திரிந்த இளைஞர் கைது.!
Boy arrested for roaming women's hostel at night
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இரவில் சுற்றிவந்த 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக விடுதிக்குள் மர்மநபர்கள் சுற்றி திரிவதாக மாணவியர் விடுதி வார்டனிடம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி அதிகாலை பெண்கள் விடுதி பகுதியில் சந்தேக நபரின் நடமாட்டம் இருந்ததாகவும், மாணவிகள் தங்கியிருக்கும் ஒரு அறையின் ஜன்னல் வழியாக அல்லாஹ்வுடைய முயற்சித்ததாகவும் பல்கலைக்கழக பதிவாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வடவள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து சந்தேக நபர் பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
என்ன நிலையில் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சுரேந்தர் (19) என்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பாரதியார் பல்கலைகழக விடுதியில் இரவு நேரங்களில் உலாவந்த நபர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பத்து நாட்களுக்கு முன்பு சுவர் ஏறி குதித்து லேப்டாப் திருட முயன்றதாகவும் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் அடையாளம் தெரியாமல் இருக்க பல்கலைக்கழக விடுதியில் உள்ள மாணவிகளின் உடைகளை தன்னுடைய மீது அணிந்து கொண்டு உலா வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சுரேந்தர் மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
English Summary
Boy arrested for roaming women's hostel at night