உசிலம்பட்டியில் பரபரப்பு - பிறந்து நலமுடன் இருந்த குழந்தை இன்று திடீரென உயிரிழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


உசிலம்பட்டியில் பரபரப்பு - பிறந்து நலமுடன் இருந்த குழந்தை இன்று திடீரென உயிரிழந்த சம்பவம்.!

மதுரை மாவட்டத்தில் உள்ள அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராம்-ராதிகா தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். இருப்பினும் ராதிகா மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். 

இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராதிகா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதன் படி அவருக்கு நேற்று குழந்தை பிறந்து தாயும், சேயும் நலமுடன் இருந்தனர். ஆனால், இன்று அந்த பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது. 

இதைப்பார்த்து அரசு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று நலமுடன் இருந்த பெண் குழந்தை இன்று எப்படி உயிர் இழந்தது? என்று மருத்துவர்கள் பெற்றோரிடமும் விசாரணை செய்தனர்.

இதைத் தொடர்ந்து மருத்துவமனை சார்பில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் படி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

born baby died in usilampatti govt hospital


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->