சித்த வைத்தியர் வீட்டில் தோண்ட தோண்ட வரும் எலும்புகள் - அதிரவைக்கும் மணல்மேடு கொலை சம்பவம்.!
bones found at siddha doctor house in kumbakonam manalmedu
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சித்த வைத்தியர் கேசவமூர்த்தி. இவர், சமீபத்தில் தன்னிடம் சிகிச்சை பெற வந்த ஓட்டுநர் அசோக்ராஜன் என்ற வாலிபரை கொன்று, தனது வீட்டில் புதைத்ததாக கைது செய்யப்பட்டார்.

பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட கேசவமூர்த்தியை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும், போலீசார் கேசவமூர்த்தியின் வீட்டு வளாகத்தில் தோண்டும்போது மனித தாடை எலும்பு கண்டெடுக்கப்பட்டது.
உடனே போலீசார் நேற்று மாலை ஜேசிபி எந்திரம் மூலம் கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி மீண்டும் தோண்டியபோது, சிறிய அளவில் சுமார் 20 எலும்பு துண்டுகள் கிடைத்தன.

இதற்கிடையே கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சோழபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மாயமாகி உள்ளது தெரிய வர அவரையும் இதேபோல் கேசவமூர்த்தி மருந்து கொடுத்து கொன்று உடலை புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் கேசவமூர்த்தி வீட்டு வளாகத்தில் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகள், மனித எலும்புகளா அல்லது காணாமல் போன வாலிபரின் எலும்புகளா? என்பதை அறிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
English Summary
bones found at siddha doctor house in kumbakonam manalmedu