பண மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி கைது! சொந்த கட்சி நிர்வாகியிடம் கைவரிசை!
BJP VK Suresh Arrested
ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த பாஜக மாவட்ட நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் சொந்த கட்சி நிர்வாகி என்று கூட பார்க்காமல், வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகி வி கே சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு துறைமுகம் அல்லது ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சுமார் 11 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததாக, பாஜக நிர்வாகி வி கே சுரேஷ் மீது, அதே கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், ஏற்கனவே பாஜக மாவட்டச் செயலாளராக இருந்த கலையரசன் என்பவரை கைது செய்து இருந்தனர்.
இந்த நிலையில், இன்று விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் வி கே சுரேஷ்-யும் இந்த வழக்கில் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஒரு அண்மைய செய்தி : திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கை, ஆரம்பம் முதல் விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவைப்பட்டால் சிறப்பு குழு ஒன்றை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.