T23 புலியால் உயிருடன் பிடித்த வனத்துறைக்கு பாராட்டு.. முக்கிய கோரிக்கை - பாஜக ஜி.கே நாகராஜ்.! - Seithipunal
Seithipunal


உயிருடன் புலியை(T23) பிடித்த வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ள பாஜக, புலி ஆட்கொல்லியல்ல என்பதால் உரிய சிகிச்சைக்குப்பின் மீண்டும் பரந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. 

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "21 நாட்கள் முதுமலை வனப்பகுதியில் தொடர் தேடுதலுக்குப்பின் சேதாரமின்றி T23 புலியைப் பிடித்த வனத்துறை அதிகாரி திரு.சேகர்குமார் நீரஜ் IFS உள்ளிட்ட சிறப்பு குழுவினருக்கு பாராட்டுக்கள்.

கடந்த அக்டோபர் 1-ம் தேதியில் T23 புலியை சுட்டுக்கொன்று பிடிக்க வேண்டுமென்று வனத்துறையின் சார்பில் உத்தரவு வெளியிட்ட செய்திக்கு, பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்ததோடு புலியை உயிருடன் பிடிக்க வேண்டுமென்று வனத்துறை அதிகாரியிடமும், வனத்துறை அமைச்சரிடமும் பாரதிய ஜனதா கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற திரு. சேகர்குமார் நீரஜ் IFS  புலியை சுட்டுக்கொல்லமாட்டோம் என்ற உறுதியை அளித்தார்.

அதேபோல் தொடர்மழையிலும் விடாது தேடி கடும்முயற்சிக்குப் பின் புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்ததோடு தேசிய புலிகள் காப்பகம் அதிகாரிகளோடு தொடர்புகொண்டு இரவு பகல் பாராமல் உரிய சிகிச்சை அளித்து, மைசூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்த வன அதிகாரிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் T23 புலி ஆட்கொல்லி புலி அல்ல என்ற தகவலை திரு.சேகர்குமார் நீரஜ் IFS தெரிவித்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. எனவே உரிய சிகிச்சை மற்றும் பரிசோதனைக்குப்பின் அவற்றை பரந்த வனப்பகுதியில் விட ஆவண செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP TN Farmer Team State President GK Nagaraj Thanks to TN Forest Dept about T 23 Tiger Issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->