பாஜகவின் ப்ளான் ! அதிமுகவின் ரகசிய சர்வே..! திமுக புள்ளிகளுக்கு பொறி வைக்கும் டெல்லி..! - Seithipunal
Seithipunal


2026-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடேறி வருகிறது. இந்நிலையில் திமுக அரசுக்கு எதிராக ஊழல் வழக்குகள் மீண்டும் தலைதூக்கக்கூடும் என்ற செய்திகள் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் பேசப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தனது கூட்டணியுடன் சேர்ந்து தேர்தல் முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மக்கள் மனநிலையை அறிய ரகசிய சர்வே ஒன்றையும் தொடங்கியுள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடத்திய பிரச்சாரத்தால் எவ்வாறு நிலைமை மாறியுள்ளது என்பதை அறிய அதிமுக ஆர்வமாக உள்ளது.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் திமுகவின் வலிமையான பகுதிகளாக கருதப்படுகின்றன. அங்கு திமுகவின் செல்வாக்கை எவ்வாறு குறைக்கலாம், எவ்வளவு சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அதிமுக ஆராய்கிறது. அதேபோல் கொங்கு மண்டலம், சென்னையின் நிலையும் கவனத்தில் கொண்டு சர்வே நடத்தப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரப் பாணி, குறிப்பாக அவர் “பை..பை.. ஸ்டாலின்” என உரையை முடிப்பதை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திமுக அரசின் பல்வேறு அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்து குவிப்பு வழக்குகள் தேர்தல் நேரத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கக்கூடும். தங்கம் தென்னரசு, பொன்முடி, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் தடைகளை எதிர்கொண்டு நிற்கின்றன.

டெல்லி வட்டார தகவலின்படி, இந்த தடைகளை நீக்க சட்டரீதியான முயற்சிகள், குறிப்பாக உச்ச நீதிமன்றம் வழியாகவே மேற்கொள்ளப்படலாம் என பேசப்படுகிறது. இது நடந்தால், ஸ்டாலின் அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் சிறை தண்டனையை சந்திக்கும் சூழ்நிலை உருவாகலாம்.

இத்தகைய நிலைமை திமுக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். குறிப்பாக தேர்தல் நேரத்தில் இதை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினால், திமுகக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டுத் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது.

2ஜி ஊழல் விவகாரம் காரணமாக 2011ல் ஆட்சியை இழந்த அனுபவம் திமுகக்கு உள்ளது. அதுபோல், ஊழல் விவகாரங்கள் மீண்டும் எழுந்தால், வரும் 2026 தேர்தல் களத்தில் எதுவும் நடக்கக்கூடும் என்ற அச்சம் கட்சிக்குள் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP plan AIADMK secret survey Delhi will set a trap for DMK points


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->