மனைவி மீது  சந்தேகம்: குழந்தைகள் என்ன பாவம் செய்தது.. தந்தை செய்த செயலால் அதிர்ந்து போன கர்நாடக! - Seithipunal
Seithipunal


மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 2 குழந்தைகளை கோடரியால் தந்தை கொடூரமாக வெட்டி கொன்ற சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம்  துகனூர் ஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சரணப்பா. . இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்  2 மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இந்த நிலையில் கணவர் சரணப்பா, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

3 குழந்தைகளும் தனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவியை சரணப்பா கொடுமைப்படுத்தி வந்ததால்  கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு 3 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சரணப்பா, மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானம் செய்து அவரையும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறில் ஈடுபட்டார். பின்னர் இரவில் அனைவரும் தூங்கி விட்டனர்.


நேற்று காலையில் 3 குழந்தைகளும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது சரணப்பா வீட்டில் இருந்த கோடரியை எடுத்து பிஞ்சு குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களை சரமாரியாக வெட்டினார்.

அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, சான்வியும், பார்கவும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். ஹேமந்த் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய ஹேமந்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஹேமந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவனது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து யாதகிரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரணப்பாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Doubt on the wife What sin have the children committed Karnataka shocked by the actions of the father


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->