தமிழகம்: மதம் மாறியவர்கள் பட்டியல் இன இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெற்று வருவது கண்டிக்கத்தக்கது - பாஜக!
BJP Narayanan condemn to tamilnadu sc reservation
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் தாழ்த்தப்பட்டோர் (SC) இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெற முடியாது என்று சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
மேலும், மதம் மாறிய பிறகும் இட ஒதுக்கீட்டு சலுகைகளை தொடர்ந்து பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாதி பாகுபாடு இருப்பதால் தான் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்க கூடிய சூழ்நிலையில், கிறிஸ்தவத்தில் ஜாதி பாகுபாடு இல்லை என்பதால் 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்பு (தாழ்த்தப்பட்டோர்) உத்தரவின் பத்தி 3-ன் படி, இந்து, சீக்கியம் அல்லது பௌத்த மதத்தைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுபவர் தாழ்த்தப்பட்டோராக கருதப்பட மாட்டார்.
ஆகையால், ஒருவர் மதம் மாறியவுடன் பட்டியலின அந்தஸ்து தானாக ரத்தாகிவிடும். மேலும், உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மதம் மாறியவர்கள் பட்டியலின சலுகைகளை பெறுவதைத் தடுக்க விசாரணை நடத்தி நான்கு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திலும் இந்நிலை அதிகமாக உள்ளது. சலுகைகளுக்காக மதம் மாறியவர்கள் போலி ஆவணங்களின் அடிப்படையில் சலுகைகளை பெற்று வருவது கண்டிக்கத்தக்கது. ஆகையால் அரசியலமைப்பு சட்டத்தை மதித்து நடப்பதோடு, அச்சட்டத்தை அமுல்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan condemn to tamilnadu sc reservation