முன்னாள் நிர்வாகியை "சரமாரியாக வெட்டிய" பாஜக நிர்வாகிகள் கைது.!!
BJP executive arrested for attack on former BJP executive
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் பாஜக முன்னாள் மாவட்ட நிர்வாகியை தாக்கிய மற்றொரு பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். குடவாசல் பகுதியில் 3 நாட்களுக்கு முன் பாஜக மாவட்ட விவசாய பிரிவு முன்னாள் தலைவர் மதுசூதனன் மீது மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் தொடர்பாக மதுசூதனன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் செந்திலரசன் உள்ளிட்டோரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் தாக்குதல் வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர், கும்பகோணத்தை சேர்ந்த சரவணன், ஜெகதீசன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பாஜக பொதுச் செயலாளர் செந்திலரசன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
BJP executive arrested for attack on former BJP executive