நெருங்கும் சட்டசபைத் தேர்தல் - முதல் மாநாட்டிற்கு நாள் குறித்த பாஜக.!!
bjp announce first conference for assembly election
தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிகளுடன் சேர்ந்து தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த முறை, தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுவது உறுதியாகி இருக்கிறது.
இந்த நிலையில், சென்னை காட்டாங்குளத்தூரில் பா.ஜ.க.வின் பூத் கமிட்டி தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில், பா.ஜ.க.வின் முதல் மாநாடு நடைபெறும் இடம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது, தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஆகஸ்டு 15-ந்தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு நாம் சுமை அல்ல. கூட்டணியில் நாம் இடம் பெற்றிருப்பது அ.தி.மு.க.வுக்கு பலம் சேர்க்கும் என்பதைக் காட்ட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
English Summary
bjp announce first conference for assembly election