ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு - சென்னை மா.போ.கழகம் அறிவிப்பு.!!
bio metric method attendance to driver and conductors in chennai muncipal transport
சென்னை மாநகர பேருந்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு செய்யப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
"சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி தெரிவிக்கப்பட்டது.
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகம், அனைத்து பணிமனைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி, 21-ந் தேதி திங்கட்கிழமையான இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
bio metric method attendance to driver and conductors in chennai muncipal transport