பெரிய ஆச்சர்யம்...! பழைய விடுமுறை ரெகுலர் அல்ல... புதுச்சேரியில் நாளை கூட விடுமுறை!
Big surprise old holiday not regular Tomorrow holiday Puducherry
விடுமுறை என்றாலே குழந்தைகள் முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி. இந்த ஆண்டு ஆயுத பூஜை (அக்டோபர் 1) கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, இன்று சரஸ்வதி பூஜை, தசரா மற்றும் காந்தி ஜெயந்தி (அக்.2) விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

மேலும், ஆயுத பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறைகள் அடுத்திருக்கும் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாட்களில் இருப்பதால், அக்டோபர் 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கூட விடுமுறை அறிவிக்கப்பட்டால், சனி, ஞாயிறு சேர்த்து 5 நாட்கள் தொடரும் பெரிய விடுமுறை வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பிராந்தியங்களில் நாளை (03-10-2025) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி,ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு மேலும் ஒரு நாள் இணைக்கப்பட்டு மகிழ்ச்சி கூட்டப்பட்டுள்ளது.
English Summary
Big surprise old holiday not regular Tomorrow holiday Puducherry