'புற்றுநோய் இனி பயமில்லை'...! சிகிச்சைக்கு பின் 5 ஆண்டுகளில் 94.5% குழந்தைகள் உயிர் பிழைத்த அதிசயம்...!
Cancer no longer fear miracle 94point5 percentage children surviving 5 years after treatment
சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, ‘தேசிய குழந்தைகள் புற்றுநோயில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் திட்டம்’ மூலம் நாட்டில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆராய்ச்சியின் முக்கிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் முடிவுகள் உலகப் புகழ்பெற்ற மருத்துவ இதழான The Lancet-இன் ‘பிராந்திய சுகாதாரம் -தென் கிழக்கு ஆசியா’ பதிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின் முதன்மை ஆசிரியரும் All India Institute of Medical Sciences (டெல்லி எய்ம்ஸ்) மருத்துவமனையின் குழந்தைகள் புற்றுநோயியல் பிரிவு தலைவருமான டாக்டர் ரச்சனா சேத் தெரிவிக்கையில், புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு குழந்தைகள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மனநிலை சவால்கள் குறித்து இதுவரை முறையான ஆவணப்படுத்தல் இல்லாத நிலை இருந்ததாக தெரிவித்தார்.
அதை சரிசெய்யும் நோக்கில் 2016 முதல் 2024 வரை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 20 சிறப்பு சிகிச்சை மையங்களில் இருந்து 5,400 குழந்தைகளின் தகவல்கள் தொகுக்கப்பட்டு விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிகிச்சை பெற்ற குழந்தைகளில் 94.5 சதவீதம் பேர் உயிர் பிழைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த உயர்ந்த உயிர் பிழைப்பு விகிதம் மருத்துவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
ஆனால், சிகிச்சைக்குப் பிறகும் குழந்தைகள் நீண்ட காலம் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்பதால், அவர்களின் ஆரோக்கிய நிலையை தொடர்ந்து கண்காணித்து தேவையான மருத்துவ மற்றும் மனநல ஆதரவை வழங்குவது அவசியம் என்றும் டாக்டர் ரச்சனா சேத் வலியுறுத்தினார்.
English Summary
Cancer no longer fear miracle 94point5 percentage children surviving 5 years after treatment