உயிர் தந்து ஐந்து உயிர்களை காப்பாற்றிய தேவதை..! -10 மாத குழந்தைக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு - Seithipunal
Seithipunal


கேரளாவில் மனதை நெகிழச் செய்யும் ஒரு மனிதநேய சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 மாதச் சிசு, தனது உறுப்புகள் மூலம் ஐந்து பேருக்கு புதிய உயிர் கொடுத்து மறைந்தாலும் மறக்க முடியாத தியாகத்தின் சின்னமாக மாறியுள்ளது.

கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 10 மாத பெண் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் விபத்தில் கடுமையாக காயமடைந்து, மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதனால் குடும்பம் துயரத்தில் மூழ்கியிருந்தாலும், ‘மற்ற குழந்தைகள் வாழ வேண்டும்’ என்ற உயர்ந்த எண்ணத்தில், பெற்றோர் உறுப்புத் தானத்திற்கு துணிந்தனர்.மேலும், மருத்துவர்கள் குழந்தையின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்களை பாதுகாப்பாக அகற்றினர்.

அந்த கல்லீரல், கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது. சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் இருந்த மற்றொரு சிறு நோயாளிக்கு வழங்கப்பட்டன. இதய வால்வு மற்றும் கண்கள் ஸ்ரீ சித்ரா திருநாள் இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டன.

இவ்வாறு, தன் குறுகிய வாழ்நாளிலேயே ஐந்து பேருக்கு உயிர் கொடுத்த மிகக் குறைந்த வயது உறுப்பு தான தியாகியாக ஆலின் ஷெரின் ஆபிரகாம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. சிறுமியின் தியாகம், ‘உயிர் கொடுத்து உயிர் காப்பாற்றிய தேவதை’ என மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

angel who saved five lives by giving her life 10 month old baby last rites state honors


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->