ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்..இலங்கைக்கு கடத்த முயன்ற சிக்கியது எப்படி?
Bidis worth Rs. 30 lakh seized How was the attempt to smuggle them to Sri Lanka caught?
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் கடத்தலுக்கு உதவிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் சமீப காலமாக இலங்கைக்கு பீடி இலைகளை கடத்தும் சம்பவம் ஆனது நடந்தேறி வருகிறது. இதனை போலீசார் கட்டுப்படுத்தி வருகின்றனர் .பீடி இலைகள் மட்டுமில்லாமல் போதை பொருட்கள் கடல் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை இலங்கைக்கு கடத்தல் கும்பல் கடத்த முயற்சித்து வருகிறது, இதனை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 30 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்துவதாக, தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தலைமையில் காவலர்கள் இன்று அதிகாலையில் தூத்துக்குடி நகர உட்கோட்டம் தாளமுத்துநகர், விவேகானந்தர் காலனி கடற்கரை பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர்.
அப்போது அந்த கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு லோடு வேன் இருப்பதை பார்த்த அவர்கள் உடனடியாக அந்த லோடு வேனை கைப்பற்றி சோதனை செய்தபோது, அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 27 மூட்டை பீடி இலைகளும், சுமார் 30 கிலோ எடை கொண்ட 3 மூட்டை கட்டிங் பீடி இலைகளும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து லோடு வேன் மற்றும் 30 மூட்டைகள் பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினர். பிடிபட்டுள்ள பீடி இலை மூட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சமாகும். மேலும் இது தொடர்பாக லோடு வேன் ஓட்டுநரான தாளமுத்துநகர், டேவிஸ்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் உமா விஜயகுமார் (வயது 23) என்பவரை கைது செய்த கியூ பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
English Summary
Bidis worth Rs. 30 lakh seized How was the attempt to smuggle them to Sri Lanka caught?