பரதநாட்டிய அரங்கேற்றம்..நயமிகுந்த நடனத்துடன் ஆடி பார்வையாளர்களை கவர்ந்த மாணவி!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி குமாரி ஸ்வஸ்திகா பரதநாட்டிய அரங்கேற்றம் அனிபால் கென்னடி எம்எல்ஏ குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

ஸ்ரீ சரவணன் அருள் நாட்டியாலயா வழங்கும் குமாரி ஸ்வஸ்திகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆச்சாரியா பால ஷிக்ஷ மந்திர் ஆனந்த் ஆடிட்டோரியம் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி மற்றும் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு. கந்தசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

நாட்டிய கலை ஆசானும், கலைமாமணி விருது பெற்றவருமான குரு சரவணன் அவர்களின் வழிகாட்டுதலில், குமாரி ஸ்வஸ்திகா தனது அரங்கேற்றத்தை நயமிகுந்த நடனத்துடன் களையக்கொண்டார்.குமாரி ஸ்வஸ்திகா அவர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி சட்ட மன்ற உறுப்பினர் வாழ்த்தி பாராட்டினார்.

இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில் விசிக பாவானன், கலைஞர்கள் எழிலன், வேல்முருகன், பிரசனா, ஸ்ரீனிவாசன், அஜு நாய்யர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு, பாரம்பரிய நாட்டியக் கலையின் வளர்ச்சிக்கும், புதிதாகும் இளைய தலைமுறையின் ஊக்கத்திற்கும் ஓர் அடையாளமாக அமைந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bharatanatyam performanceThe student captivated the audience with a beautifully graceful dance


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->