பனியன் கம்பெனி வேலை... பக்கத்தில் 'ஹெராயின்' பிசினஸ்...! - திருப்பூரில் சிக்கிய பீகார் வாலிபர்கள்! - Seithipunal
Seithipunal


திருப்பூர்-மங்கலம் சாலையில் ஆண்டிபாளையம் அருகிலுள்ள அணைபாளையம் பகுதியில், சென்டிரல் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அச்சமயம் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்ட இரண்டு இளைஞர்களை நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் அளித்த பதில்கள் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் இருந்தது காவலர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து மேற்கொண்ட சோதனையில், அவர்களிடம் உயர்தர போதைப்பொருளான ஹெராயின் சுமார் 210 மில்லிகிராம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபன் குமார் (22) மற்றும் கவுதம் குமார் (25) எனவும், இருவரும் திருப்பூரில் கோழிப்பண்ணை பகுதியில் தங்கி கடந்த ஒரு மாதமாக பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்டிரல் காவலர்கள் இருவர்மீதும் வழக்கு பதிவு செய்து, கைப்பற்றப்பட்ட ஹெராயினை பறிமுதல் செய்து  விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Banyan Company job Heroin business side Bihar youths caught Tiruppur


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->