பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரும் முதலாளிகளுக்கு ஒரு சட்டமா? வெளுத்துவங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை! - Seithipunal
Seithipunal



தனியார் முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் செயல்படுகின்றன என்று, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விமர்சித்துள்ளது.

மேலும், பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரும் முதலாளிகளுக்கு ஒரு சட்டம் என வங்கி விதிகளில் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், வங்கிக்கடன் வசூலில் கால அவகாசம் கோரி பலர் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வங்கி கடனுக்காக வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை கோரியும், கடனைத் திரும்ப செலுத்த போதிய கால அவகாசம் வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் பாதிக்கப்பட்ட பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களை இன்று விசாரணை செய்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் வங்கிகளுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதில், "கடனை திரும்ப செலுத்தும் வாடிக்கையாளர்கள் திரும்ப கடன் கேட்டால் உடனடியாக வங்கிகள் கொடுப்பதில்லை. 

அதே சமயத்தில் கடனை திருப்பி தராத மோசடி செய்யும் நபர்களுக்கு தான் வங்கிகள் கடன் கொடுக்கிறது.

இப்படியான மோசடி நபர்களுடன் சில வங்கி மேலாளர்கள் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்கள். 

உதாரணத்திற்கு தனி நபர் ஒருவர் தான் வாங்கிய மொத்த கடன் 2 கோடி ரூபாயில், ரூ.20-30 லட்சம் குறைத்து கட்ட முன்வந்தால் வங்கி மேலாளர்கள் அதனை ஏற்பதில்லை.

ஆனால், ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் கடன் தொகையில் பாதியை கட்டுவதற்கு முன்வந்தால் உடனடியாக வங்கிகள் ஏற்றுக்கொள்கின்றன. 

ஆக, பாமரனுக்கு ஒரு சட்டம், பெரு நிறுவனங்களுக்கு என்று வங்கிகளில் தனி சட்டம் இருக்கிறதோ?” என்று கருத்து தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BANK LOAN ISSUE CHENNAI HC


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->