அன்று நிதீஷ், இன்று சதீஷ்... UAE-யில் கேரள பெண்களின் மர்ம மரணம்!
Yesterday Nithish today Satish Mysterious death of Kerala women in UAE
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அதுல்யா (29), கணவர் சதீஷின் வரதட்சணை கொடுமையால் மரணம் அடைந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
2014-ஆம் ஆண்டு திருமணம் நடந்த அதுல்யா, ஒரு பைக் மற்றும் 43 சவரன் நகை கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு சதீஷ் உடல் மற்றும் மனரீதியாக பல ஆண்டுகள் துன்புறுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வயிற்றில் உதைத்தும், கழுத்து நெரித்தும், தட்டால் அடித்தும் கொடுமை செய்ததாக அதுல்யாவின் குடும்பம் கூறுகிறது.
சமீபத்தில், UAE-யில் அதுல்யா மரணம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் இதை மறுத்து, "தற்கொலை செய்திருப்பார் என நம்ப முடியவில்லை" என கூறினார். ஆனால் அதுல்யாவின் குடும்பம், "மரணத்தில் மர்மம் உள்ளது" என புகார் அளித்துள்ளது. அதுல்யாவுக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் சதீஷ் அடிக்க முயலும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக கேரளாவைச் சேர்ந்த விபன்சிகா மணியன் (32), தனது 1 வயது மகளுடன் ஷார்ஜாவில் மரணம் அடைந்தது கடந்த 8ம் தேதி நடந்தது.
விபன்சிகாவின் கணவர் நிதீஷ் வலியவீட்டில் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், இதன் விளைவாகவே விபன்சிகா உயிரிழந்ததாகவும் பெற்றோர் கேரள போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களும் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவை தொடர்பாக UAE அதிகாரிகளும், கேரள போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Yesterday Nithish today Satish Mysterious death of Kerala women in UAE