விடுதியில் கள்ளக்காதலியுடன் உல்லாசம்..கடைசியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலியை கொன்று உடலை வீடியோ காலில் நண்பர்களுக்கு காட்டிய ஆசாமியின் வினோத செயல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் குண்டறா பகுதியை சேர்ந்த அகிலா (35) மற்றும் எர்ணாகுளம் நேரியமங்கலம் பகுதியை சேர்ந்த பினு (38) இடையே கள்ள உறவு இருந்தது. இருவரும் அடிக்கடி எர்ணாகுளம் ஆலுவாவில் உள்ள ஒரு விடுதியில் சந்தித்து வந்தனர்.

நேற்று முன்தினம் விடுதியில் இருந்தபோது, அகிலா பினுவிடம் “இனி திருமணம் செய்யவேண்டும்” என வற்புறுத்தினார். பினு மறுத்ததால், இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தின் உச்சியில் பினு, அகிலாவின் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

அதுமட்டுமன்றி, பினு நண்பர்களுக்கு வீடியோ காலில் உடலை காட்டி, தானே கொன்றதாகச் சொன்னார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, பினுவை கைது செய்தனர்.இந்த கள்ளக்காதல் கொலை கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தநிலையில் அகிலாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Having fun with a love affair in a lodge the horrific incident that happened to the woman in the end


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->