மழையால் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்ட வாழை மரங்கள்...! வேதனையில் விவசாயிகள்...!!! - Seithipunal
Seithipunal


ஈரோடு பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள சித்தன் குட்டை, கனரா மொக்கை, வால் கரடு மற்றும் ஜே ஜே நகர் பகுதியில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும். இப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மற்றும் காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

மேலும், 7 மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட கதளி, நேந்திரம் ரக வாழை, தற்போது குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பவானி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியுள்ளது.

இதனால் சிந்தன் குட்டை, ஜே.ஜே நகர், புதுக்காடு, கன்ரா மொக்கை பகுதிகளில் சுமார் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 10000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் லட்ச கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளனர்.இந்த கடினமான சூழ்நிலையில்,தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேல வாழை மரங்களை நீர் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக வாழை மரங்கள் அழுகும் நிலைக்கு வந்துவிட்டது. இதனால் இன்று வாழை மரத்திலுள்ள வாழைத்தார்களை விவசாயிகள் பரிசல் மூலம் சென்று பறித்து வரும் அவலம் அரங்கேறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Banana trees rotting due to rain Farmers in pain


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->