ரேபிடோ பைக் டாக்சிக்கு மதுரையில் தடை.!  - Seithipunal
Seithipunal


ரேபிடோ பைக் டாக்சிக்கு மதுரையில் தடை.! 

இன்று மதுரை மாவட்டத்தில் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

அந்தக் கூட்டத்தில் ரேப்பிடோவில் இருசக்கர வாகனம் ஓட்டும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ரேப்பிடோவில் இயங்கும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் இருசக்கரவாகனங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடபட்டுள்ளது.

மதுரையில், கடந்த வாரமே சுமார் 40-க்கும் மேற்பட்ட ரேப்பிடோ பைக்குகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மதுரையில் அனுமதி பெறாமல் இயங்கிய ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இது தொடர்பாக மதுரையில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் இரண்டாயிரம் இரு சக்கர வாகனங்களை உறுப்பினர்களாக்கி இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ban on rapido bike taxi in madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->