பி.ஆர்க் படிப்புகான தரவரிசைப் பட்டியல் வெளியீடு..  கலந்தாய்வு தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பி.ஆர்க். படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 8ம் தேதி முதல் நடைபெறும் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைகான தரவரிசை பட்டியலை நேற்று தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டது. மேலும், அவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 8ம் தேதி முதல் நடைபெறும் அறிவித்துள்ளது .

மேலும், விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மாணவர் சேர்க்கை சேவை மையத்தை (டி.எப்.சி.) அணுகலாம். அதற்கு இன்றும், நாளையும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து கலந்தாய்வு 8-ந் தேதி தொடங்குகிறது. 8-ந் தேதியன்று சிறப்பு பிரிவினருக்கும், அதன்பின்னர், பொதுப்பிரிவினருக்கு 9-ந் தேதி முதலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bachelor of architecture councelling in October 8


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->