கன்னியாகுமரி || வாளிக்குள் தலைகீழாக கிடந்த குழந்தை - பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!
baby died for drowned bucket water in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் லியோன்நகரை சேர்ந்தவர்கள் ஆரோக்கிய ஜெனோ-டயானா. இந்த தம்பதியினருக்கு மூன்றரை வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ரியானா என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.
இந்த நிலையில், ஆரோக்கிய ஜெனோ நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டதால், வீட்டில் அவரது மனைவி டயானாவும் இரண்டு குழந்தைகளும் மட்டும் இருந்தனர். அதன் படி நேற்று மாலை டயானா வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது 2 குழந்தைகளும் வீட்டின் முன்பு சத்தம் போட்டபடி விளையாடிக் கொண்டிருந்தன. இதனை டயானா சமையல் அறையில் நின்றபடி கேட்டு கொண்டு வேலை செய்தார்.
சிறிது நேரம் இந்த சத்தம் கேட்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த டயானா முன்பகுதியில் சென்று பார்த்தபோது குழந்தை ரியானா வீட்டின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்து அசைவில்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் பதறியடித்து கொண்டு குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் டயானா கதறி அழுதார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
baby died for drowned bucket water in kanniyakumari