ஆகஸ்ட் 3ம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
August 3rd local holiday to dharmapuri district
தர்மபுரி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள், முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்கள், கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதையொட்டி, வரும் ஆகஸ்ட் 3ம்தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது
மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி வேலை நாளாக என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
English Summary
August 3rd local holiday to dharmapuri district