மதம் மாற்றம் செய்ய முயற்சி..மனைவிக்கு எதிராக கணவர் புகார்!
Attempting to change religion Husband files complaint against wife
மதம் மாற்றம் செய்ய முயன்றதாக மனைவிக்கு எதிராக கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில், மதம் மாற்றம் செய்ய அழுத்தம் திணித்ததாக மனைவிக்கு எதிராக கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெட்டகேரி கிராமத்தை சேர்ந்த விஷால் (26), தவ்ஹின் (23) ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், தவ்ஹின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்து, முஸ்லிம் முறைப்படி திருமணத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விஷால் இந்து மதத்துக்கு செல்லக்கூடாது என்றும், முஸ்லிம் மதத்திற்கு மாற வேண்டும் என்றும் மனைவி கட்டுப்பாடுகள் விதித்ததாக குற்றம்சாட்டுகிறார். இதனால் தகராறு ஏற்பட்டது.
தற்போது, விஷால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மனைவி மற்றும் குடும்பத்தினர் மதம் மாற்றம் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரை போலீசார் பதிவு செய்து, விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Attempting to change religion Husband files complaint against wife