#கடலூர் || கனிமவளத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் 
                                    
                                    
                                    Attack on Minerals Department officials in Cuddalore
 
                                 
                               
                                
                                      
                                            கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கனிமவளத்துறை அதிகாரிகள் உட்பட 4 பேர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனிமவல்துறை அதிகாரிகளுக்கு கூழாங்கற்கள் கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் கடத்தல் லாரியை கைப்பற்றி காவல் நிலையம் எடுத்துச் சென்றனர்.
மர்ம நம்பர்கள் லாரி கவிழ்த்தில் அதிலிருந்து கனிமவல்துறை உதவி பொறியாளர், உதவி இயக்குனர் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அப்போது கொக்கம்பாளையம் அருகே லாரியை வழிமறித்து நடத்திய தாக்குதலில் கனிமவளத் துறை அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் அதிகாரிகளின் செல்போன், மோதிரம் உள்ளிட்டவற்றை கும்பல் திருடி சென்றுள்ளது. அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சிலம்பு அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ராமஜெயம், பாலசுப்பிரமணியன், சேகர்,  துரைராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு கனிமவளத்துறை அதிகாரிகள் ஆலடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                        Attack on Minerals Department officials in Cuddalore