பணம் எடுக்க கை வைத்தால் பட படவென்று ஷாக் அடிக்கும் ஏடிஎம் - கதவை தொட்டாலே காத்திருக்கும் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கசென்றால் மின்சாரம் தாக்குவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து நேரில் சென்று பார்த்தபோது, பொறையார் சிவன்கோவில் தெற்கு வீதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாசலில் உள்ள ஏடிஎம் மையத்தின் கதவை தொட்டாலே ஷாக் அடிக்கிறது.

உள்ளேசென்று பார்த்தால் மேலே உள்ள மின்விளக்குகள் அனைத்தும் கழற்றப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டிருக்கின்றன. உட்புறம் முழுவதும் மின் ஒயர்கள் தாழ்வாக தொங்குகின்றன.

சுவற்றை தொட்டாலும் மின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது. அதைவிட இரவு நேரங்களில் இந்த மையத்திற்கு, டார்ச் லைட்டுடன் வர வேண்டியநிலை உள்ளது.

கணினி திரையில் எரியக் கூடிய விளக்கு எரியாததால், அதில் லைட் அடித்துதான் பணம் எடுக்க வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தள்ளப் பட்டுள்ளனர்.

வங்கி அதிகாரிகளிடம் பலமுறைமுறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக ஏடிஎம் மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atm shock bank officials without concern


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal