மாசி களரிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் - அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்.! 
                                    
                                    
                                   arjun sambath request tn govt holiday announce to masi kalari
 
                                 
                               
                                
                                      
                                            மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
"திருப்பரங்குன்றமானது முருகப்பெருமானின் முதல் படை வீடாக திகழ்கிறது. இங்குள்ள மலையே சிவனாக காட்சி தருகிறார். மலை முழுவதும் முருகப்பெருமானுக்கு சொந்தம். வெளியில் இருந்து வரும் சில முஸ்லிம் அமைப்புகள் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி கொடுப்போம் என்று பிரச்சினைகளை தூண்டும் விதமாக செயல்படுகிறார்கள். 
லண்டன் நீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகப்பெருமானுக்கு சொந்தம் என்ற தீர்ப்பை வழங்கி உள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்துல் சமது எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல், கூட்டணி தர்மத்திற்காக தி.மு.க. அரசு கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. 
தமிழகத்திலும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். தைப்பூசம் திருநாளில் அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது போல மாசி களரிக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும்" என்றுத் தெரிவித்தார்..
                                     
                                 
                   
                       English Summary
                       arjun sambath request tn govt holiday announce to masi kalari