பொதுத்தேர்வு முடிவு - முதலிடத்தை பிடித்த அரியலூர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்தத் தேர்வில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 95.03 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதன் முழு விவரத்தை இங்குக் காண்போம். 

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:-

தமிழ்- 99.15 சதவீதம், இயற்பியல்- 99.22 சதவீதம், வேதியியல்- 98.99 சதவீதம், உயிரியல்- 99.15 சதவீதம், கணிதம்- 99.16 சதவீதம், தாவரவியல்- 99.35 சதவீதம், விலங்கியல்- 99.51சதவீதம், கணினி அறிவியல்- 99.73 சதவீதம், வணிகவியல்- 98.36 சதவீதம், கணக்குப்பதிவியல்- 97.36சதவீதம், பொருளியல்- 98.17 சதவீதம், கணினி பயன்பாடுகள்- 99,78 சதவீதம், வணிக கணிதம், புள்ளியல்- 98.78 சதவீதம்.

பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்:-

தமிழ்- 135, இயற்பியல்- 1,125, வேதியியல்- 3,181, உயிரியல்- 827, கணிதம்- 3,022, தாவரவியல்- 269, விலங்கியல்-36 , கணினி அறிவியல்-9,536, வணிகவியல்- 1,624, கணக்கு பதிவியல்- 1,240.

பொதுத் தேர்வில் முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்:-

அரியலூர்- 98.80 சதவீதம், ஈரோடு, 98 சதவீதம், திருப்பூர்-97.50 சதவீதம், கோவை- 97.50 சதவீதம், கன்னியாகுமரி-97 சதவீதம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ariyalur won first place in 12 public exam


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->